அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் - முக்கிய அறிவிப்பு இதோ!!

 
ttn

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

jalli

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்தில் , 15ஆம் தேதி பாலமேட்டிலும்,  16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு 300 மாடுபிடி வீரர்கள்,  150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காணவரும் அனைவரும் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்,  அத்துடன் கொரோனா  இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

jalli

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் வருகிற 16-ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார். 16 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் , அவனியாபுரம், பாலமேடு வரிசையில் அலங்காநல்லூரில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியும் ஒத்திவைக்கப்பட்டு திங்கட்கிழமையான  17ஆம் தேதி நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கவுள்ள நிலையில் ஜல்லிகட்டு நடைபெறும் ஊர் பொதுமக்கள் மட்டும் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.