அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு- 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

 
ஜல்லி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்க 1200 காளைகளும், 700 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கருப்பாயூரணி கார்த்தி 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து கார் பரிசு வென்றார். கடந்தாண்டு முதலிடம் பிடித்த பூவந்தி அபிசித்தர், 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். குன்னத்தூர் திவாகரன் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 2022ம் ஆண்டிலும் கார்த்தி முதல் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்ற உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சிறந்த காளைக்கான பரிசு திருச்சி, மேலூரை சேர்ந்த குணா என்பரின் காளை தேர்வாகி காரை தட்டி சென்றது. சிறந்த காளைக்கான 2ம் பரிசு, மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் காளை தேர்வாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.