பைக் மீது லாரி மோதி கோர விபத்து- கவுன்சிலர் உட்பட 3 பேர் பலி

 
ச்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பைக் மற்றும் காய்கறி ஏற்றிச்சென்ற மினிலாரி மோதியதில் சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர மன்ற உறுப்பினர் உஷா பிரபு (40) அவரது கணவர் அருள் செல்வம் (50) அவரது தங்கை (35) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் சுரண்டை சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இரட்டை குளம் விலக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுரண்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரண்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கவுன்சிலரே போதிய விழிப்புணர்வு இன்றி ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.