விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற அலங்கு படக்குழுவினர்!

 
alangu

அலங்கு படக்குழுவினர் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அன்புமணி ’அலங்கு’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் இதற்கு முன்னதாக உறுமீன், பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சங்கமித்ரா தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த நிலையில், அலங்கு படக்குழுவினர் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

அலங்கு படத்தின் டிரெய்லரை பார்த்து விஜய் பட குழுவினரை பாராட்டினார். தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள "அலங்கு" திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது.  அலங்கு திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ரஜினிகாந்த் ஏற்கனவே பாராட்டினார். வெ.க தலைவர் விஜய்யும் அலங்கு படத்தின் டிரெய்லரை பார்த்து படக்குழுவினரை பாராட்டினார்.