அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

 
tn

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

Jallikattu

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும்.   குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில்,  போட்டியை நடத்த அனுமதி மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் ஊர் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்படி  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ம் தேதி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

jallikattu

இந்நிலையில் ஜனவரி 17ம் தேதி நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.  உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜன. நடைபெறும் நிலையில் வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.