அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

 
tn

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

jalli

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்க 1200 காளைகளும், 700 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

jalli

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை தொடங்கி நடைபெற்றது.  பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் , மூர்த்தி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர். வெற்றி பெறும் காளையின் உரிமையாளர், காளையருக்கு தலா ஓர் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.  காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், டிவி உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படவுள்ளன.