அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை!!

 
gold

அட்சய திருதியை  ஒட்டி நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது.

gold

தமிழகம் முழுவதும் நேற்று அட்சய திருதியை  கொண்டாடப்பட்டது.  இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் பெருகும் என்பது ஐதிகம்.  இதனால் தமிழகத்தில் மக்கள் நேற்று தங்கம் வாங்க நகை கடைகளை நோக்கி படையெடுத்தனர்.  இதனால் நேற்று 4:30 முதல் நகை கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் நகைகள் வாங்க தொடங்கினர்.

gold
அட்சய திருதியை  நாளான நேற்று எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக தங்கம் விற்பனையாகியுள்ளது.  நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 18 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது.  இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 30 விழுக்காடு அதிகம்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக விற்பனை குறைவாக இருந்த நிலையில்,  தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால்,  மக்கள் மீண்டும் நகைகள் வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.  தினமும் 7 முதல் 8 டன் வரை விற்பனையாகி வந்த நிலையில்,  நேற்று ஒரே நாளில் 18 டன் விற்பனையாகியுள்ளது, நகை விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.