நெருங்கும் அட்சய திருதி... தொடர் உயர்வில் தங்கம் விலை..!!

 
Gold

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து, மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் முதல் வாரம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், இந்த வாரம் ரூ.14 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஈரானுடனான பேச்சு வார்த்தையின் இன்னும் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், தங்கத்தின் விலையும் ஏற்றமும், இறக்கமாக உள்ளது. இன்றைய விலை உயர்வு, தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 14) ஒரு கிராம் ரூ.14,220-க்கும், சவரன் ரூ.1,13,760-க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஏப்., 15) கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560-க்கும்விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.275-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.