அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை உயர்ந்தது!!
May 10, 2024, 07:12 IST1715305372373

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கம் முதல் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றுமுன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630 விற்பனையானது.
நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,280க்கு விற்பனையாகிறது.