சென்னையில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி!
Feb 4, 2025, 10:51 IST1738646511451

சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராமபுரத்தில் சாலையில் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் சென்று பார்த்த போது அது ஏகே 47 துப்பாக்கி என்பது தெரியவந்தது. அந்த துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் கிடந்துள்ளது. இதனை பார்த்த சிவராஜ் என்பவர் ஏகே 47 துப்பாக்கியையும், 30 தோட்டாக்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். துப்பாக்கி சாலையில் கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சாலையில் ஏகே 47 துப்பாக்கி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.