“உயிருள்ளவரை விஜயுடன் மட்டுமே எங்களது பயணம் தொடரும்”- அஜிதா
Dec 23, 2025, 20:12 IST1766500945973
உயிருள்ளவரை விஜயுடன் மட்டுமே எங்களது பயணம் தொடரும் என பதவி தராததால் தவெக அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் பேட்டியளித்துள்ளார்.

சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா ஆக்னல், “தலைமை மீதும் தளபதி மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. கண்டிப்பா எங்களை கூப்பிட்டு எங்கள் கோரிக்கைகளை பரீசிலனை செய்வர். உயிருள்ளவரை விஜயுடன் மட்டுமே எங்களது பயணம் தொடரும். இறுதி மூச்சிவரை உயிர் போற கடைசி நொடி வரை இறுதி மூச்சு வரை தளபதிக்காக பயணிப்போம்” என்றார்.


