சாவிலிருந்து மீண்டுவந்த அஜிதாவின் அதிரடி எக்ஸ் பதிவு

 
ச் ச்

2026-ல் தளபதியாரை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன் என தவெகவை சேர்ந்த அஜிதா தெரிவித்துள்ளார்.

விஜய் காரை மறித்த தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி| Tvk executive Ajitha  attempts suicide after blocking Vijay's car

தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலை திமுக கை கூலி என கூறியதாலும், கட்சியில் எந்த பதவியும் வழங்காததாலும் மனம் உடைந்து கடந்த 25-ம் தேதி தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு உடல் நிலை சீரான நிலைக்கு திரும்பியதால் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு வீடு திரும்பினார்.


வீடு திரும்பியவுடன் அஜிதா தனது எக்ஸ் தளத்தில், “அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 கழகத் தோழர்கள் என் மீது கொண்ட பேரன்பினாலும் பிரார்த்தனைகளாலும் மட்டுமே பூரண குணமடைந்துள்ளேன். 2026-ல் தளபதியாரை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன்... #வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.