துபாய் ரேஸில் அசத்திய அஜித் ரேஸிங் அணி

 
துபாய் ரேஸில் அசத்திய அஜித் ரேஸிங் அணி

துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் 911 GT3R என்ற பிரிவில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி (901) மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.

Image



துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸிங் போட்டியில் 992 போர்ஷே பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் அணி. ஒட்டுமொத்த ரேஸில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி 23-வது இடத்தை பிடித்துள்ளது. தனது அணி வெற்றி பெற்றதும் தேசிய கொடியுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார் நடிகர் அஜித் குமார்.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும்  அஜித் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது