புதிய கூட்டணி அமைத்தார் அஜித்குமார் - சூப்பர் அப்டேட்..!

 
1

நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'இண்டிபென்டன்ஸ் பவர்அப்' பிராண்டுடன் அதிகாரப்பூர்வமாகக் கைகோர்த்துள்ளது. இந்த இண்டிபென்டன்ஸ் பிராண்டின் கீழ் புதிதாக 9 வகையான பிஸ்கட்டுகள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

இந்நிலையில், இந்த தயாரிப்புகளுக்கான விளம்பரங்களில் நடிகர் அஜித் படம் இடம்பெற்றுள்ளது. விளையாட்டு மற்றும் வர்த்தகத் துறையில் இணைந்துள்ள இந்த புதிய கூட்டணி அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’, அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படுகிறது. இதனால் இந்த கூல்ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார்.

ஆனால் நடிகர் அஜித்தின் இந்த தோற்றம் அவரது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவரது ரசிகர்களாலேயே ட்ரோல் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், ‘இன்டிபெண்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டுடன் மீண்டும் அஜித்குமார் அணி கூட்டணி வைத்துள்ளதாக அக்குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்த பிஸ்கட்டின் விளம்பர முகமாக அஜித் இடம்பெற்றுள்ளார்.

இந்த பிராண்டின் பேரில் 9 பிஸ்கட் வகைகளை தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பவர் அப், மில்கி பவர், பட்டர் பிளிஸ், மேரி ப்ரைம், குளுக்கோஸ் பூஸ்ட், கோகோ, க்ரெம்யம் ஆரஞ்ச், க்ரெம்யம் சாக்கோ, கோகோ பர்பன் என ஒன்பது வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.5லிருந்து ரூ.125 என பல வடிவங்களில் இந்த பிஸ்கட்டுகள் கிடைக்கின்றன.