அஜித்குமார் மரணம் - சிபிஐ விசாரணை அதிகாரி நியமனம்

 
ச் ச்

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் டெல்லி சிபிஐ

DSP மோகித்குமார் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்குமார் மரணத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சு! சந்தேகத்தை கிளப்பும்  ஜி.கே.வாசன்.. உண்மை வெளிவருமா? - TamilWire

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் துதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் டெல்லி சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மதுரை வருகின்றனர். சிபிஐ விசாரணை வரும் 14ம் தேதி தொடங்குகிறது.