போர்ச்சுக்கல் கார் ரேஸ்- முதல் சுற்றில் அஜித் அசத்தல்
Jan 20, 2025, 11:17 IST1737352069154

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கலில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
அண்மையில் துபாயில் நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார், தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியுடன் பங்கேற்றார். இதில் 911 ஜிடி3 ஆர் என்ற பந்தயப் பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி 3 ஆம் இடத்தை பிடித்தது.
இந்நிலையில் அடுத்ததாக போர்ச்சுக்கல் சென்றுள்ள அஜித், அங்கு நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் கார் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார். முதல் தகுதிச் சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு நிமிடம் 41 நொடிகளில் பந்தய எல்லையை கடந்தார்.