13 வயதே ஆன இளம் கார் பந்தய வீரரிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித்

 
ச்

சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் ரேஸர் அஜித்குமார்  ஆசையாக ஆட்டோகிராஃப் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சென்னையைச் சேர்ந்த 13 வயது இளம் ரேஸர் ஜேடன் இமானுவேல். இவர் 10 வயது முதல் MINI GP ஜெர்மனி பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பாவில் 3 சீசன்கள் முழுமையாக ரேஸிங் செய்த இளம் இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் இளம் ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் ரேஸர் அஜித்குமார்  ஆசையாக ஆட்டோகிராஃப் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு ஸ்பெயினில் நடக்கவிருக்கும் போட்டியில் களமிறங்கும் ஜேடனுக்கு அஜித் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக, கார் பந்தயத்தை புரோமோட் பண்ணுங்க, பிரபலத்துங்க, என்னை பிரபலப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அஜித், இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் படும் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரியவில்லை எனக் கூறிய அவர், ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் சாம்பியன் ஆவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.