அஜித், விஜய் ஒன்றாக இருப்பது போன்ற பேனருடன் கூட்டத்துக்கு வந்த ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அஜித் விஜய் புகைப்படத்துடன் கூடிய பேனரை கொண்டுவந்தவர்களை போலீசார் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் நுழைவுவாயில் கேட்டிலிருந்து திரும்பி சென்றனர்.

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஐந்தாயிரம் நபர்கள் புதுச்சேரியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு கியூஆர் கோடு அட்டை வழங்கபட்டு உள்ளே அனுமதிக்கபட்டனர். விஜய் மைதானத்திற்கு உள்ளே சென்றவுடன் கியூஆர் கோடு அட்டை இல்லாதவர்களும் உள்ளே அனுமதிக்க பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியதால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் அனுமதிக்காததால் ஆனந்திடம் வாக்கு வாதம் செய்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து தொண்டர்களிடம் ஆன்ந்த் மைக்கில் பேசிய போது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் ஆனந்தின் மைக்கை பிடிங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க கல்மண்டபத்தை சார்ந்த அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து விஜய், அஜித் ஒருவர் மேல் ஒருவர் தோளில் கைபோட்டபடி அச்சிடபட்ட புகைப்பட பேனரை கூட்டத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது அனுமதி இல்லாமல் புகைப்பட பேனரை போலீசார் கூட்டம் நடைபெற்ற மைதானத்திற்குள் அனுமதிக்காததால் மைத்தானத்திற்குள் எடுத்து செல்லாமல் ஏமாற்றத்துடன் எடுத்து சென்றனர். விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை காட்டும் வகையில் இருவரின் புகைப்பட பேனர்களை ரசிகர்கள் ஒன்றிணைத்து கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.


