“வாழ்க்கை மிகக் குறுகியது; சண்டை போடாதீங்க”- நடிகர் அஜித்

 
அஜித்

துபாய் கார் பந்தயப் போட்டியில், கார் ஓட்டும் முடிவிலிருந்து நடிகர் அஜித் பின்வாங்கியுள்ளார்.

கடந்த 7ஆம் தேதி, பயிற்சியின்போது அதிவேகத்தில் அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. ஆனால், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அணியின் நலனுக்காக அஜித் கார் ரேஸில் இருந்து விலகியுள்ளார். ஆனால், அவரது அணி தொடர்ந்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜித்குமார் தவிர மேலும் மூன்று சர்வதேச கார் ரேஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது ரசிகர்கள் நேரில் போட்டியைக் காண வந்திருந்தனர். அதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எமோஷனலாக இருந்தது. எனது ரசிகர்கள் அனைவரும் மன நிம்மதியுடன், சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிகொள்கிறேன். வாழ்க்கை மிகக் குறுகியது. கடுமையாக உழையுங்கள்...வெற்றி அடையாவிட்டால் சோர்ந்துவிடாதீர்கள். மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் விட்டுக்கொடுக்காதீர்கள். ரசிகர்கள் சண்டைபோடக் கூடாது. நேரத்தை வீணடிக்காதீர்கள். படிப்பவர்கள் படிப்பில் கவன செலுத்துங்கள். வேலை செல்பவர்கள் கடுமையாக உழைத்து வேலை செய்யுங்கள். பிடித்த விஷயத்தை தைரியமாக செய்யுங்கள், வெற்றி கிடைத்தால் நல்லது. தோல்வியடைந்தால் சோர்ந்து போகாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.