ரஜினி சங்கி கிடையாது - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எமோஷனல்

 
tn

"ரஜினிகாந்த் சங்கி கிடையாது" என்று இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

tn

இயக்குநர்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற  சிறப்பு தோற்றத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம்  பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. 

tn

இந்நிலையில் ‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும்; இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது; அப்படி இருந்திருந்தா அவர் 'லால் சலாம்' படத்துல நடிச்சு இருக்க மாட்டார்; ஏனெனில், இதில் மனித நேயமிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்' என்றார்.