அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் பாலா தரிசனம்..!

 
1 1

அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது பக்தர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பாலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.