ஷூட்டிங் முடிஞ்சுது! பிரியாணி ட்ரீட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

 
ஐஸ்வர்யா

வளையம் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Actress Aiswarya rajesh gave Biriyani treat to Valaiyam movie team after wrapped up the shooting

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து காக்கமுட்டை, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.  தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக கன்னட சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார்.

தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள வளையம் படத்தில் நடித்து முடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அறிமுக இயக்குநர் மனோபாரதி இயக்கியுள்ள இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள சூழலில் பட குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.