தீபாவளியால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு!

 
மோசமடைந்த காற்று மாசு.. டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு போகியை விட இந்த ஆண்டின் காற்று மாசு குறைவு: தமிழக அரசு தகவல்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை பலரும் தாறுமாறாக வெடித்ததால் தமிழ்நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது.  குறிப்பாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டியுள்ளது.  சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200ஐ தாண்டியது. காற்றின் தரக்குறியீடு மணலி- 259, பெருங்குடி- 228, ஆலந்தூர்- 216, வேளச்சேரி- 209, அரும்பாக்கம்- 198, ராயபுரம்-158 ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

tn

101-200 என்ற அளவு மிதமான காற்று மாசு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101-200 என்ற மிதமான காற்று மாசுவினால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம். 201-300 என்ற அளவிலான மோசமான காற்று மாசுவினால் நீண்டநேரம் வெளியில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல், இதயநோய் உள்ளவர்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம்.