தீபாவளியால் அதிகரித்த காற்று மாசு...சென்னையில் 100ஐ தாண்டியது

 
tn

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஒருவருக்கொருவர தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளது.  சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மாசு அளவு 100 ஐ தாண்டியுள்ளது.  வேலூர், கடலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து உள்ளது.  சென்னையில் காற்று மாசின் அளவு 100 ஐ தாண்டி இருக்கிறது