அக்.6ல் விமானப்படை வான்வெளி சாகசம் - பொதுமக்கள் இலவசமாக பார்க்க அனுமதி..

 
அக்.6ல் விமானப்படை வான்வெளி சாகசம் - பொதுமக்கள் இலவசமாக பார்க்க அனுமதி..  

விமானப்படை வான்வெளி சாகசத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பாக பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.  

இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி வரும் அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணியளவில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி, சென்னை கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். 

அக்.6ல் விமானப்படை வான்வெளி சாகசம் - பொதுமக்கள் இலவசமாக பார்க்க அனுமதி..  

அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளும், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு பயிற்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் விமானப்படை சாகசத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக  பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.