நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது குளிர்சாதன மின்சார ரயில்!
தமிழகத்தின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேவிற்கு இரண்டு குளிர்சாதன மின்சார ரயில்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ,ஒரு குளிர்சாதன மின்சார ரயில் முழுவதுமாக தயாராகி சமீபத்தில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே 14 பெட்டிகளை கொண்ட இந்த குளிர்சாதன மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் , மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் தாமதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது.
சமீபத்தில் பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் பொழுது இந்த குளிர்சாதன மின்சார ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னறிவிப்பு இன்றி அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் 29 கிமீ பயணத்திற்கு ₹95 ஆகவும், 9 கிமீக்கு ₹35 ஆகவும், 24 கிமீக்கு ₹70 ஆகவும், 34 கிமீக்கு ₹95 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


