தொடர்கதையான அதிமுக பதவி பறிப்பு..! இதுவரை 28 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்..!!
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மாவட்ட வாரியாக நிர்வாகிகளின் பதவிகளைத் தொடர்ந்து பறித்து வருகிறார்.தனது தலைமைக்கு எதிராக அதிருப்தி முகாமில் செயல்பட்டதாகக் கூறி பதவி பறிப்பு செய்து வருகிறார்.ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி, இன்று மேலும் 2 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்திலேயே அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்கள் தனி அணியாக உருவாகினர்.அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தனர். இது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவடட்ச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று 2 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே. வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி. கிருஷ்ண முரளி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அதிரடி பதவி பறிப்பு புள்ளிவிவர விபரம்
- இன்று நீக்கப்பட்ட மாவட்டங்கள் புதுக்கோட்டை தெற்கு & தென்காசி வடக்கு
- நீக்கப்பட்ட முக்கிய நபர்கள் வைரமுத்து & கிருஷ்ணமுரளி
- முந்தைய நீக்கங்கள் 26 மாவட்டச் செயலாளர்கள்
- இதுவரை நீக்கப்பட்ட மொத்த மா.செ-க்கள் 28 பேர் (26 + 2)
இன்று நீக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்து, அதிமுகவில் இதுவரை மொத்தம் 28 மாவட்டச் செயலாளர்கள் தங்களது பதவிகளைப் பறிகொடுத்துள்ளனர். இபிஎஸ் அணியின் இந்த அசுர வேக நீக்க நடவடிக்கைகள் சாதாரண தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

