சென்னையில் அதிமுகவுக்கு பின்னடைவு - 2 ஆம் இடத்தில் பாஜக!!

 
tt

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் பாஜக 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 5025 வாக்குகள் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து பாஜக வேட்பாளர் வினோஜ்  பி செல்வம் 1493 வாக்குகள் பெற்றுள்ளார்.

dhayanithi maran

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி 84 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் கார்த்திகேயன் 601 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

r

அதேபோல் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து வருகிறார் . இதற்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடத்தையும் , அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் 1051 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

rr

வடசென்னையில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர் பால் கனகராஜ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.