அதிமுகவின் அடுத்த விக்கெட் காலி..நடிகை கவுதமி விலகல்..!!
அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விடுவித்து கொள்வதாக கவுதமி அறிவிப்பு..
நடிகை கவுதமி, 1997ல் பா.ஜ., வில் இணைந்தார். இளைஞரணி துணை தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். தன் சொத்து தொடர்பான பிரச்னையில், பா.ஜ., தனக்கு உதவவில்லை எனக்கூறி கடந்த 2023ம் ஆண்டு பாஜவில் இருந்து விலகினார்.
பின்னர் 2024-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிட கவுதமி வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு கட்சி தலைமை வாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று (ஜூன் 14) அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இன்று முதல் நான் வகித்து வரும்அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கட்சியில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகை கவுதமி கூறியுள்ளார்

