பரபரக்கும் அரசியல் களம் : முதல்வர் விஜய்யை 'நார்சிசிசம்' (Narcissism) என விமர்சித்த அதிமுக ஐடி விங்!
த.வெ.க கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
த.வெக தலைவரும், தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டார். இந்த நிகழ்ச்சி திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று திங்கள்கிழமை (ஜூன் 1) மாலை 4.15 மணிக்கு நடைபெற்றது.
தி.மு.க இப்போது தீய சக்தி இல்லை, தீர்ந்துபோன சக்தி, மக்களை விட்டு தூரமாக சென்ற தூர சக்தியாக மாறிவிட்டது என முதல்வர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார்.மேலும் தமிழ்நாட்டில் திமுக, தவெக இடையில் தான் போட்டி தொடர்கிறது. அதிமுக தீர்ந்து போன சக்தியாக மாறி விட்டது.குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பதற்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் ஒன்று சேர்ந்து திருட்டு தனமாக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்." என்று திருச்சியில் பேசிய தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்சி கிழக்கில் விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்து திமுக ஐடிவிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில், தன்னுடைய பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக முதல்வர் பேசியுள்ளார். சட்டம் ஒழுங்கை சரி செய்வதற்கு காவல்துறை அதிகாரிகளை நியமித்து விட்டால் போடுமா? தானாக நிர்வாகம் செயல்படுமா? இதெல்லாம் என்னயா புது உருட்டா இருக்கு? என கேட்டு கலாய்த்துள்ளனர்.
இவர் மீது பழி போடுகிறார்களாம். தன்னுடைய ஆட்சியில் நடக்கின்றன குற்றங்கள் பற்றியே கவலை, வருத்தம் அவரது முகட்டில் தெரிந்ததா? இதனை சரி செய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதோடு எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம் என்று சொல்வதற்கு பெயர் தான் மாற்றமா? இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூட்டு சேர்ந்து சூழ்ச்சி செய்ததற்கு ஆதாரம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது அதிமுக ஐடிவிங்.
மேலும், இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி தலைமை செயலகத்தின் கீழ் மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை பற்றி ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை. வாயளவில் எங்களை மற்றும் பலர் என சொல்லும் இவர்கள், யாரை இங்கிருந்து இழுக்கலாம் என மனதளவில் 24 மணிநேரமும் அதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்? எனவும் கேள்வியை முன்வைத்துள்ளது.
அதோடு எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்க கோட்டு போடுங்க. போயர் கார்டன்ல வீடு கூட வாங்குங்க. யாரு கவலைப்பட்டா? உங்களை சுத்தி தான் உலகமே இயங்குற மாதிரி சும்மா நசநசன்னு புலம்பிட்டு இருக்காதீங்க என கடுமையாக பதிலடி கொடுத்து அதிமுக ஐடிவிங் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NARCISSISTIC SPEECH!
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 1, 2026
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை… pic.twitter.com/cQY2bO6Olp

