தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு : அதிமுக- அமமுக விரைவில் இணைப்பு ?
அமமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை தினகரன் பேசியதாவது, இப்போதும் அதிமுகவுடன் இருக்கிறேன். அதிமுக கூட்டணியில்தான் இருக்கேன். விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என என்னிடத்தில் பலபேர் பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில இருக்கிற சூழ்நிலையில் மற்ற கட்சிகள் மாதிரி நேர் எதிரான இன்னொரு கூட்டணியில போய் ஆதரவு கூடாது; அது தவறு என நினைத்தேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில, அமமுக ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற முடிந்தது. இருந்தாலும் நாம் அதிமுக கூட்டணியில இருப்பதுதான் கூட்டணி தர்மம். அதுதான் என்னுடைய குணாதிசயமும் கூட.இந்த கடினமான நேரத்திலும் நான் அண்ணா திமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறேன். அதிமுகவும் அமமுகவும் ஒரே கட்சியா இணைந்துதான் ஆகணும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலை வந்திருப்பதாக, மற்றவர்கள் நினைக்கலாம்.
எங்க கட்சியில எந்த நிர்வாகிகளும், தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் என்கிட்ட அந்த மாதிரி பேசல. சரி, பார்ப்போம்.. வெயிட் பண்ணுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் ட்விஸ்ட் வைத்துள்ளார். இதன் மூலம் அதிமுக, அமமுக இணைப்பு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடப்பது உறுதியாகி உள்ளது.

