இடைத்தேர்தலில் திடீர் திருப்பம் : அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக..!

 
1

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பது தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. 

தாராபுரம் தொகுதியில் 11வது சுற்றின் முடிவில் அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி திமுக 2வது இடத்தை பிடித்திருக்கிறது. எனினும் தவெக 5486 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 11வது சுற்றின் முடிவில் தவெக 31327 வாக்குகளும், அதிமுக 24363 வாக்குகளும், திமுக 25841 வாக்குகளும் நாம் தமிழர் 2499 வாக்குகளும் சிபிஎம் 578 வாக்குகளும் பெற்றிருக்கின்றன.