அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு..

 
rb udhayakumar

எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் என்றால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார்.  

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த, அமமுக நிர்வாகியை இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனைக்கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றிருந்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  பேசிய அவர், “துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தைரியமாக மதுரைக்கு வந்தார்.

அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு..

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் சிறந்த துறையாக காவல்துறை இருந்தது. ஆனால், இப்போது ஏவல் துறையாக உள்ளது. திமுக அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டும் தலைவராக உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனை பொறுக்க முடியாமலே வழக்கு பதியப்பட்டு உள்ளது.  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசு, எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிய திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் பொம்மை முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மதுரையில் தொடங்கி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் வெறும் முன்னோட்டம் தான்.

ஆர்பி உதயகுமார்

மதுரை தொண்டர்கள் ஜெயிலுக்கு போக பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல ஜெயில்களை பார்த்தவர்கள். எங்களிடம் இது போன்று பூச்சாண்டி காட்டாதீர்கள். அதிமுக எதற்கும் அஞ்சாது. எடப்பாடி பழனிசாமி மீது பொய்வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் என்றால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்.” என்று பேசினார்..