அதிமுக vs திமுக: அடுக்குமாடி குடியிருப்புகள் யாருடைய ஆட்சியில் அதிகம்? ஆதாரத்துடன் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

 
1

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார். நமது #DravidianModel-இல் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மாற்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம். 

அதற்கான Data இதோ:

கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இந்த வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன.

நம்முடைய #DravidianModel-இல்,

☀️ சென்னை - 30,167
☀️ மற்ற மாவட்டங்களில் - 46,207 
-என மொத்தம் 76,374🌇 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்!

இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன்.

#DravidianModel 2.0-வில் இது இன்னும் பன்மடங்காகும் என பதிவிட்டுள்ளார்