விசிக மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக? - இபிஎஸ் சொன்ன பதில்..

 
மு.க.ஸ்டாலினால் முதல்வராக முடியாது: எடப்பாடி பழனிசாமி அதிரடி


விசிக மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.  கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில்,  சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்பட  நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.  முன்னதாக முஸ்லிம் லீக் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்   உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி,  அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்
கொண்டனர். 

தேர்தலில் களம்காணும் விசிக வேட்பாளர் பெயர்கள் அறிவிப்பு

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதிமுக கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரணி;  மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நல்ல மனம் உடையவர்கள் அதிமுகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வோம்;  அவர்களுடன் சேர்ந்து அதிமுக சிறந்த ஆட்சியை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.