தமிழகத்தில் அதிமுக ஆட்சி- JVC TIMES NOW கணிப்பு
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என JVC TIMES NOW கணிப்பில் தெரியவந்துள்ளது.
JVC TIMES NOW நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, அதிமுக கூட்டணி 128- 147 இடங்களிலும், திமுக கூட்டணி 75- 95 இடங்களிலும், தவெக 8-15 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் CNN- NEWS 18 நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 101-113 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 114- 124 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 4-10 இடங்களை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 125 இடங்கள் முதல் 145 இடங்கள் வரை திமுக கூட்டணி பெரும் என்று கணித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக 65 முதல் 80 இடங்களை பிடிக்கும் என்றும் தவெக 18 முதல் 24 இடங்களை பிடிக்கும் என்றும் கணித்துள்ளது

