33 இடங்களில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிப்பு..!

இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்:
ஶ்ரீ பெரும்புதூர் - பிரேம்குமார்
வேலூர் - எஸ்.பசுபதி
தருமபுரி - அசோகன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - பி.அருணாச்சலம்
நீலகிரி - லோகேஷ் தமிழ்செல்வன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பி.பாபு
சிவகங்கை - சேவியர்தாஸ்
தூத்துக்குடி - ஆர்.சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி - சிம்லா முத்துச்செல்வன்
கன்னியாகுமரி - பசுலியான் நசரேத்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
நேற்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்:
வடசென்னை - ராயபுரம் மனோகரன்
தென் சென்னை - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
அரக்கோணம் - விஜயன்
ஆரணி - கஜேந்திரன்
கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
விழுப்புரம் - பாக்கியராஜ்
சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
கரூர் - தங்கவேல்
சிதம்பரம் - சந்திரஹாசன்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
நாகை - சுர்ஜித் சங்கர்
இராமநாதபுரம் - ஜெயபெருமாள்
இடைத்தேர்தல்:
விளவங்கோடு (இடைத்தேர்தல்) - யு.ராணி
தமிழகத்தில் 32 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதியை சேர்த்து மொத்தம் 33 இடங்களில் அதிமுக போட்டியிடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதற்கட்டமாக நேற்று 16 வேட்பாளர்களை வெளியிட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மேலும் 16 பேரின் பெயரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர். தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி நெருக்கடி கொடுக்கிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அதிமுக என்ற கட்சியை துவக்கி எவ்வளவு இன்னல்களை சந்தித்து கட்சியை இந்த நிலைமைக்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும். அதே போல் நாங்களும் அதிமுகவை வெற்றி பாதையில் வழிநடத்துவோம். சட்டரீதியாக அனைத்தையும் சந்திப்போம் என்றார்.