அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை!!

 
PMK

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

PMK

இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் , மதுவிலக்கு அமல் படுத்தவும் மறுத்து வருகிறது. கள்ளச்சாராய விவகாரத்தில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள்.  பாமக கூட்டத்திற்கு வரும் பெண்களை அடைத்து வைப்பது,  உள்ளாட்சி பிரதிநிதிகளை மிரட்டுவது என திமுக அமைச்சர்கள் அத்துமீறுகின்றனர்.  இந்த அத்துமீறல்களை முறியடித்து பாமக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.  அதிமுகவின் நோக்கமும்,  பாமகவின் நோக்கமும் இந்த தேர்தலில் ஒன்றாகவே இருக்கிறது.  எம்ஜிஆர் , ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று கற்றுக் கொடுத்தனர். தீய சக்தியை வீழ்த்த வலிமை பாமகவுக்கு உண்டு.  பாமகவின் மாம்பழ சின்னத்தில் அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும். 

pmk

விக்ரவாண்டியில் திமுக தோல்வி அடைந்து விடும் என்று தெரிந்ததால்தான் முதல்வர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. அவர் பிரச்சாரம் செய்தாலும் திமுக தோற்றுவிடும் என்றார்.