#justin அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Updated: Mar 21, 2024, 11:44 IST1711001658616
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்தக் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை தற்போது வெளியிட்டார் எடப்பாடி கே பழனிச்சாமி.
வேட்பாளர் பட்டியல்:
கோவை நாடாளுமன்ற தொகுதி : சிங்கை ராமச்சந்திரன்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி : அருணாச்சலம்
நீலகிரி தனித் தொகுதி : லோகோஷ் தமிழ்ச்செல்வன்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி : பிரேம்குமார்
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி : கார்த்திக் அப்புசாமி என்கின்ற கார்த்திகேயன்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி : டாக்டர் எஸ் பசுபதி
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி : டாக்டர் ஆர் அசோகன்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி : கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி : முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி: கருப்பையா
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி : சந்திரமோகன்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி : பாபு
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி : சேவியர் தாஸ்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி : சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி :சிம்லா முத்துச்செல்வன்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி : பசிலியா நசரேத்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார்