இனியாவது அந்த துருப்பிடித்த இரும்புக்கரத்தை பயன்படுத்துவாரா மு.க.ஸ்டாலின்? - அதிமுக கேள்வி
இனியாவது அந்த துருப்பிடித்த இரும்புக்கரத்தை பயன்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வருவாரா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்சும், அவரது நண்பரும் மெத்தபெட்டமையின் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, இருவரிடமும் 10 கிராம் மெத்தப்பட்டமையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக திறமையற்ற பொம்மை முதல்வரின் விடியா திமுக ஆட்சியில் அவர் "நேரடி கட்டுப்பாட்டில்" இருக்கும் துறையை சேர்ந்த காவலரே போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த அவலம்.
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) November 29, 2024
வெறும் மேடைப்பேச்சுக்காக மட்டும் போதையில்லா தமிழகம் என விளம்பரம் செய்யும் விடியா அரசின் விளம்பர முதல்வர்… pic.twitter.com/ip73PZbWu1
நிர்வாக திறமையற்ற பொம்மை முதல்வரின் விடியா திமுக ஆட்சியில் அவர் "நேரடி கட்டுப்பாட்டில்" இருக்கும் துறையை சேர்ந்த காவலரே போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த அவலம். வெறும் மேடைப்பேச்சுக்காக மட்டும் போதையில்லா தமிழகம் என விளம்பரம் செய்யும் விடியா அரசின் விளம்பர முதல்வர் தன்னுடைய துறையிலேயே நடந்த இந்த அவலத்திற்கு பொறுப்பேற்பாரா?இனியாவது போதைப்பொருள் ஒழிப்பில் உறுதியான தக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த துருப்பிடித்த இரும்புக்கரத்தை பயன்படுத்த முன்வருவாரா? என கேள்வி எழுப்பியுள்ளது.