பட்டியலின மாணவி வன்கொடுகை செய்யப்பட்ட விவகாரம் - பொள்ளாச்சியில் அதிமுக போராட்டம்

 
admk

சென்னை பல்லாவரத்தில் பட்டியலின மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி, கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்து, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.


உடன், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. செ.தாமோதரன், திரு. வி.பி. கந்தசாமி, திரு. அமுல்கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.