”இடைத்தேர்தல் நடத்தக்கூடாது” - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
நாடு முழுவதும் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

நாடு முழுவதும் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். பீகாரின் பங்கிபூர், மத்தியபிரதேசத்தின் தாட்டியா, குஜராத்தின் மஞ்சள்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. ஜூன் மாத தொடக்கத்தில் காலியான குஜராத்தின் மஞ்சள்பூருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதனிடையே தமிழகத்தில் தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாக இந்திய தோ்தல் ஆணையத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை புகாா் மனு அளித்துள்ளர் இதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்தக்கூடாது, குதிரை பேரம் குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

