தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை!

 
immanuel

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான  இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-ஆவது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணி கண்டன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.