நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு

 
மோடி எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

மக்கள் உங்களை கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்!' - பிரதமர் மோடிக்கு எடப்பாடி  பழனிசாமி வாழ்த்து | edappadi palanisamy wishes modi - Vikatan

தலைநகர் டெல்லியில்  64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன்  புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற 28ம் தேதி சாவர்க்கர் பிறந்த நாளில்  பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.  ஆனால் மரபுப்படி நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை வலியுறுத்தி திமுக, விசிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்துள்ளன. இந்நிலையில் விழாவை புறக்கணிக்கும்  முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரீசிலனை செய்யவேண்டும் என்றும், விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மே.28ல் நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர், மாநிலங்களை தலைவர் அலுவலகங்களில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சண்முகம், சந்திர சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.