அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து..!

 
eps

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக இன்று காலை கூட இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக திகழ்கிறது. இந்த நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டு உள்ளார். 

இதனிடையே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் முதல் முறையாக நடைபெற இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தவெகவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் கூட்டம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.