ஆரம்பமே ஆட்டம்... அதிமுகவினர் விருப்பமனு பெறுவதில் மந்தம்

 
அ அ

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை வழங்கலாம் என அதிமுக தலைமை அறிவித்தது. 15ம் தேதி பிற்பகல் தொடங்கிய விருப்ப மனு 23ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image

முதல் நாளில் மட்டும் 1237 பேர் விருப்ப மனுவை வழங்கியுள்ளனர். அதில் இபிஎஸ் க்காக மட்டும் 349 பேர் விருப்ப மனு வழங்கியுள்ளனர். மீதமுள்ள 888 விருப்ப மனுக்களை கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். 2ம் நாள் விருப்ப மனு சொற்ப எண்ணிக்கையில்(69) மட்டுமே பெறப்பட்டது.  இந்நிலையில் இன்று ஆர்வமாக விருப்ப மனுக்களை பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 300க்கும் குறைவான விருப்ப மனுக்களே பெற்றுள்ளனர். 

குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முக்கிய பொறுப்புகளில் உள்ள பலர் இதுவரை விருப்ப மனுவை வழங்கவில்லை. குறிப்பாக தென்மாவட்டங்களை சார்ந்த, கொங்கு மண்டலத்தில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விருப்ப மனுக்கை இதுவரை பெறவில்லை. ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பெற்றுள்ளனர். கூட்டணி உறுதியாகவில்லை,விருப்ப மனு வழங்கிய தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு போகுமா என்ற பல சந்தேகம் இருப்பதால் அதிமுகவினர் விருப்ப மனு வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.