அம்மா உணவகத்தில் விஜய் படம்- ஜெ., படம் அகற்றப்பட்டதால் அதிமுகவினர் கோபம்

 
அம்மா உணவகத்தில் விஜய் படம்- ஜெ., படம் அகற்றப்பட்டதால் அதிமுகவினர் கோபம்

ஆவடி அருகே திருமுல்லைவாயில் அம்மா உணவகத்தில் உள்ள முகப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் நீக்கப்பட்டு முதல்வர் விஜய் புகைப்படம் ஒட்டப்பட்டத்தற்கு கண்டனம் எழுந்துள்ளது.


ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் சோழம்பேடு சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முகப்பில் அம்மா உணவகம் என்ற பெயரின் அருகே இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் நீக்கப்பட்டு தற்போதைய, முதலமைச்சரான விஜயின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அதிமுகவின் சீரிய திட்டங்களில் அம்மா உணவகத் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. இதனால் கடந்த காலங்களில் கூட திமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் நீக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது தவெக ஆட்சியில்  அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக விஜயின் புகைப்படம் அமைக்கப்பட்டு விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.