கள்ளச்சாராய விவகாரம் - ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறது அதிமுக

 
eps

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறது அதிமுக.

tt

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கோரி இன்று அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம்,விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கள்ளச்சாராய விவகாரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா  10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

tt

இதனிடையே கள்ளச்சாராய   விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் ,  முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்  நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய எடப்பாடி பழனிசாமி , போதைப்பொருள் விற்பனை தடுக்க கோரி ஆளுநரிடம் ஏற்கனவே அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.  இருப்பினும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என். ரவியை  சந்தித்து இன்று மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.