7 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக

 
eps

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. 

EPS

இந்நிலையில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக. 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது .

Kanimozhi

தூத்துக்குடி, திருவள்ளூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.  திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், தூத்துக்குடியில் கனிமொழி 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.