பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது!

 
protest

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பாக எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட என்னையும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. செ.தாமோதரன், திரு. வி.பி.கந்தசாமி, முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் வரையிலும், #யார்_அந்த_SIR? என்ற உண்மை வெளிவரும் வரையிலும் மாண்புமிகு அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் சொல்லுக்கிணங்க, அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.